Saturday, August 14, 2010


பூமிப் பந்து
எங்களை மட்டுமே சுமப்பதாயும்,

வசந்தம் எங்களுக்காகவே
சுகந்தம் கொடுப்பதுமான
ஓர் பனிப்பொழுதின்
பெரு வெளியில்

நானும் அவளும்
கைகோர்த்து நடக்கிறோம்...

அவள்தான் சொன்னாள்
உங்கள் உயரம்
சில நேரங்களில்
அவஸ்தையைக் கொடுக்கிறது என்று..

திடுக்கிட்டு நான் அவள்
திருமுகம் பார்க்கிறேன்..

வெட்கம் உதிர்த்து
உதடுகள் பூத்து
அவளே தொடர்ந்தாள்

நாம் நடந்து செல்லும்
தருணங்களில் மட்டும்
என் முத்தங்கள்
கருவுற்ற கணமே சிதைகிறது என்றும்..

இருப்பினும் சில முத்தங்கள்
தங்கள் உயரம் கருதாது
முத்திரையாக்கப் படுவதால்
என் முத்தம்
மிக உயர்வானது என்றும்
உரிமையின் நிமித்தம்
உளமகிழ்வு கொண்டாள்

உண்மைதான்
அவளோடு நடக்கும்
சர்க்கரைப் பொழுதுகளில்
தலை தாழ்ந்து கொடுக்கும்
எனது
மரியாதைக்குரிய முத்தத்திலும்
உயர்வானதுதான்
அவளின் முத்தம்....

1 comment:

  1. வாழ்க்கை வாழ்வதற்க்கே........

    ReplyDelete