
விரக்தியின் விளிம்பில்
என் சக்தியை இழந்து
சூன்யத்தின் ஆழத்தில்
நான் மூழ்கித் தவிக்கையில்...
அவளின் விசையே
என்னை
"அன்பிப்" பிடித்தது..
அவளின் வரவு
என் உறவைப்
புதுப்பித்தது...
அவளின் பேச்சு
என் மூச்சைத்
துலக்கிற்று..
என் அக இருள்
அகற்றிய
வெளிச்சம் அவள்..
என் சுயத்தை
வகுக்கும்
சூத்திரம் அவள்..
அவ்விசையின் இயக்கம்
நின்றுபோயின்
என் அசைவின்
மொத்தமும் அழியக்கூடும்...
No comments:
Post a Comment