Saturday, November 27, 2010




டிசம்பர் 1


என் வாழ்வின்
உயர்வான பரிசு
உருவான தின
வாழ்த்துக்கள்....!

பிரியா
சிவன்

Saturday, October 2, 2010

மா..!

கள்ளமில்லா சிறு மழலை
முகம் பூக்கும்
புன்னகை போல்
உள்ளமெல்லாம்
எனைத்தேக்கி உயிர்குவிக்கும்
சிறு நகையில்
கள்ளிருக்கும் உதடுகளால்
கனி ஒழுகும் சொல்லெடுத்து
மந்திரமாய் என்னுள்ளே
மா என்றே ஒலிக்கவைத்தாய்..

மா!
என் மீதான
உன் உணர்வின்
ஒட்டுமொத்த அளவீடு..

மா..!
அதிகபட்ச அன்பின்
சர்வதேசக் குறியீடு

மா..!
உலக அழகியலின்
ஒருமித்த ஒலிவடிவம்

மா..!
என் அகம் புறம்
இரண்டையும் காட்டும்
அதிசயக் கண்ணாடி

ஒரு நொடிக்குள்
சுவர்க்கத்தைக்
கட்டி எழுப்ப இயலுமா?
முடியும் என்கிறது மா!

மனதை
உணர முடியும்
கேட்க முடியுமா?
முடியும் என்கிறது மா..!

மா..!
உன்
மனதின் வடிவம்..

நீ
மா சொல்லும் பொழுதுகளில்
நட்டு வைத்துப் போகிறாய்
சிறு சிறு பூங்காக்களை

நீ
மா உதிர்க்கும் தருணத்தைக்
காற்றின் அதிர்வுகளும்
கவனிக்கத் தவறுவதில்லை
அதனால்தான்
தென்றலாய் என்னுள்
பண்ணிசைத்துக் கொடுக்கிறது

உன்
மா! வில் புலர்கிறது
எனக்கான விடியல்

எங்கே!
மா சொல்லு
என் அணுக்கள் முழுக்க
வாசம் சுரக்கும்

மா..! சொல்லு
இதயம் இன்னும்
இளமையாகும்

மா..! சொல்லு
உயிரின் நீளம்
இன்னும் கூடும்

மா..! சொல்லு
உறவின் வேர்கள்
உலகை ஈர்க்கும்

உன் நிலை
அறிவிக்க
இந்த மா விற்குதான்
எத்தனை வடிவங்கள்!

மோகிக்கும் போது
உம் மா வில்

பரிதவிப்பின் போது
ஏம் மா வில்

ஆமோதிக்கும் போது
ஆ மா வில்

நான் கேலி பேசுகையில்
அம் மா வில்

நான் மெளனிக்கும்
மறுகணம்
என்னம் மா வில்

உன்
செல்லக் கோபத்தின்
போ மா வில்

என
எல்லா இடங்களிலும்
ஈறு கெடாத பெயரின்
உச்சமாய்
சொக்கி நிற்கிறது
இந்த மா..!

கிச்சி கிச்சி மூட்ட
கிளர்ச்சிகள் கூட்ட

உயிர்களை பூக்க
உணர்வுகள் ஆக்க

சிறகுகள் விரிக்க
சிந்தனை கொடுக்க

கனவுகள் விதைக்க
கவிதைகள் படைக்க

உலகைக் குடிக்க
அழகை வடிக்க

என்னை என்னை
மறுபடி மறுபடி
பிறக்கச் செய்துப்
புதுப் பொலிவாக்க..
எல்லாம் உந்தன்
மா..! வால் முடியும்..

மா..!
எனக்கான
காலக் கணக்கின்
கூட்டல் குறியீடு

மா..!
எனக்கான
மகிழ்வெளியின்
கிழக்கு சூரியன்

மா..!
எனக்கானக்
காட்சிப் பிழைகளின்
கடிவாளம்

மா..!
எனக்கான
வலிகளின்
ஒரே நிவாரணீ

மா..!
எனக்கான
மங்கல ஓசை

மா..!
என் உயிரின்
கடைசித் துளிக்கு
அதுவே
முற்றுப் புள்ளி..!

ஆசிரியை நீ!

ஆசிரியை நீ!
என் தூரிகைப் பிடித்து
உயிர் ஓவியம் எழுதக்
கற்பித்தவள்..

உன்னை வரைய
என்னைப் பிழிந்து
என்னை அறிய
தன்னையே கொடுத்தவள்..

உயிரும் மெய்யும்
உருகும் கலையை
உணர்வின் உச்சம்
பருகும் கலையை
அள்ளிக் கொடுத்த
அமுத சுரபி நீ..

ஓ!
அந்த இரவின்
ஒவ்வொரு துளியும்
என் அனுக்களில்
அமுதம் நிரம்பி வழிறது..

மேகம் கணத்து
நீர் பெருக்கெடுத்தால்
பயிர் செழிக்கும்
என் தேகம் கணத்து
நீர் பெருக்கினாய்
உயிர் செழிக்கிறது,.

செல்லம்
புஜ்ஜிமா
கண்ணம்மா
குட்டிமா
குண்டம்மா..
அத்தனையும் விட
அதிகமாய் இனிக்கிறது
உயிர் உருகளின்போது
நாம் எழுப்பும்
ஒலி வடிவங்கள்....

உன் அனுமதிகளில்
நிரூபணமாகிறது
உனக்கும் எனக்குமான
புனிதம்..

உன்
விரல்களின் ஸ்பரிசத்தில்
ஒழிந்து கிடக்கிறது
எனக்கானப் பிறவிப் பயன்..

உன் சிணுங்கல்களில்
கட்டி எழுப்பப் படுகிறது
எனக்கான சிறு சிறு
சுவர்க்கங்கள்..

உன் மூச்சுக் காற்றில்
செத்து மடிகிறது
என் பேச்சுக்கள்..

என் ஏக்கத்தை
எதிர்கொள்ளும் பொழுதுகளில்
கூசுகிறது என்கிறாய்
இப்பொழுது
நானல்லவா
அதிகம் கூசுகிறேன்
அத் தாக்கத்தை எழுதும்
வரிகளில்..

அட !
என்ன விந்தை இது
நான் மட்டுமல்ல
நீ கூட "விந்தை" செய்கிறாய்..

ஆம்!
அந்த இரவே
நம் அன்பின்
ஒட்டுமொத்த அடையாளம்...

Saturday, August 21, 2010

கொக்குகளே!குருவிகளே!

கொக்குகளே.குருவிகளே
குற்றால அருவிகளே
பக்குவமா பாட்டு ஒன்னு
பாடுகிறேன் கேளுங்களேன்...

அக்கரையின் சீமையிலே
அழகின் வெள்ளாமையிலே
"அக்கறையின்" அர்த்தமென
ஆங்கொருத்தி எனக்கிருக்கா

மலையகத்தின் மாது அவள்
கலையழகின் தூது அவள்
விலைக்கேதும் ஒப்பில்லா
தலைவி அவள்,தாரமவள்

அறிவியலின் அதிசயமாம்
இணையவெளி பெரும் பரப்பில்
செறிவான குணங்களுடன்
சேர்ந்த புது சொத்து அவள்

அண்ணாவின் தேடல்தனில்
எந்நாளும் எனக்காக
பொன்னான ஓர்பொழுதில்
என்னோடு மனம்புகுந்தாள்

அன்னையவள் அன்பிற்கு
தன்னையவள் ஈடாக்கி
என்னையவள் சீராட்ட
இன்னுமொரு தாயானாள்

வெள்ளை மனம் நல்ல குணம்
கொள்ளை நிலா கொண்டமுகம்
வள்ளல் அவள் அன்பு நிதம்
அள்ள அள்ளக் குறையலியே

காலமெலாம் அவள் நினைப்பில்
கரைந்துவிட நான் நினைப்பேன்
ஞாலமது ஓய்ந்திடினும்
நான் அவளின் துணையிருப்பேன்...

Saturday, August 14, 2010



கவி பிரியா
கவி பிரியன்..

எங்கள் கவிதைப் புணர்ச்சியில்
கருத் தரித்த
கவிக்குஞ்சுகள் அவர்கள்..

இப்புவியின்
வசந்தம் எழுதப்
புறப்படப் போகும்
கவி தாசர்கள்....

அன்பின்
செழுமை தாங்கி
அர்த்தமுள்ள மனிதர்களைப்
பிரசவிக்கும
அட்சயப் பாத்திரம்
அவர்கள்...


வைகறையின்
புதுக் கதிர்கள்..

வசந்தத்தின்
வரவுகள்..

ஆம்!
அவர்கள்
எங்கள் குழந்தைகள்.





விரக்தியின் விளிம்பில்
என் சக்தியை இழந்து
சூன்யத்தின் ஆழத்தில்
நான் மூழ்கித் தவிக்கையில்...

அவளின் விசையே
என்னை
"அன்பிப்" பிடித்தது..

அவளின் வரவு
என் உறவைப்
புதுப்பித்தது...

அவளின் பேச்சு
என் மூச்சைத்
துலக்கிற்று..

என் அக இருள்
அகற்றிய
வெளிச்சம் அவள்..

என் சுயத்தை
வகுக்கும்
சூத்திரம் அவள்..

அவ்விசையின் இயக்கம்
நின்றுபோயின்
என் அசைவின்
மொத்தமும் அழியக்கூடும்...

வைகறையின்
நடைபயிற்சி நொடிகள்
இப்பொழுதெல்லாம்
அலுப்புத்தட்டுவதே இல்லை..
சாலைகளெங்கும்
அவள்
வியாபித்திருப்பதால்...

பூமிப் பந்து
எங்களை மட்டுமே சுமப்பதாயும்,

வசந்தம் எங்களுக்காகவே
சுகந்தம் கொடுப்பதுமான
ஓர் பனிப்பொழுதின்
பெரு வெளியில்

நானும் அவளும்
கைகோர்த்து நடக்கிறோம்...

அவள்தான் சொன்னாள்
உங்கள் உயரம்
சில நேரங்களில்
அவஸ்தையைக் கொடுக்கிறது என்று..

திடுக்கிட்டு நான் அவள்
திருமுகம் பார்க்கிறேன்..

வெட்கம் உதிர்த்து
உதடுகள் பூத்து
அவளே தொடர்ந்தாள்

நாம் நடந்து செல்லும்
தருணங்களில் மட்டும்
என் முத்தங்கள்
கருவுற்ற கணமே சிதைகிறது என்றும்..

இருப்பினும் சில முத்தங்கள்
தங்கள் உயரம் கருதாது
முத்திரையாக்கப் படுவதால்
என் முத்தம்
மிக உயர்வானது என்றும்
உரிமையின் நிமித்தம்
உளமகிழ்வு கொண்டாள்

உண்மைதான்
அவளோடு நடக்கும்
சர்க்கரைப் பொழுதுகளில்
தலை தாழ்ந்து கொடுக்கும்
எனது
மரியாதைக்குரிய முத்தத்திலும்
உயர்வானதுதான்
அவளின் முத்தம்....

Sunday, August 8, 2010

கொஞ்சம் பொறுத்திருங்கள்!

கொஞ்சம் பொறுத்திருங்கள் !
என்னவள் கிடைத்த
மகிழ்வின் மிகுதியில்
என் இயக்கத்தில்
சில மாற்றங்கள்
செய்யப்பட்டுள்ளது...

அனுக்கள் ஒன்றுகூடிக்
குவித்த மனுக்களின்
மிரட்சியில்
மாநாடு ஒன்றிர்க்கு
மகுடம் சூட்ட இசைந்துள்ளது
என் மூளை...

நியூரான்களின் சுறுசுறுப்பில்
இதயத்தின் இடைவிடாத
துடி துடிப்பில்..
இதோ வெற்றி விழா
வெகு விமரிசையாக
தொடங்கியிருக்கிறது
எனக்குள்..

இனி அவளும் அவளின்
நிமித்தமுமாய்
என் வார்த்தைப் பூக்கள்
வாசம் பரப்பும்..

அன்புடன்
பிரியா வாசகன்